ஒரு பிரியாணி வாங்கினால் 1 இலவசம்.. குவிந்த மக்கள்.. கடுப்பான கலெக்டர் - வேலூரில் பரபரப்பு

By Raghupati RFirst Published Jul 9, 2023, 6:24 PM IST
Highlights

ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்த பிரியாணி கடைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான் . இந்தியாவில் மொத்தம் 20 வகையான பிரியாணி உண்டு. அதில் எட்டு வகை பிரியாணி, இந்தியாவின் அணைத்து இடங்களிலும் கிடைக்கும். எப்போதுமே பிரியாணி என்றாலே தனி கூட்டம் அதனை சுவைக்க காத்திருக்கிறது.

காட்பாடியில் புதிய பிரியாணி கடை திறப்பு விழா  நடைபெற்றது. இந்த கடையில் பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது. ஏன் என்றால், இந்த கடை திறப்பு விழா சலுகை ஒன்றை அறிவித்தது. அதன்படி, திறப்பு நாளில் ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணியும், ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று விளம்பரம் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழை என்பதால் இந்த சிக்கன் கடையில் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் கூடியது.

மக்களின் ஆர்வமாக கூட்டம் கூட்டம் சென்றதால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு வந்த அவர் கடை உரிமையாளரிடம், "எந்த அடிப்படையில் இலவசம் அறிவித்தீர்கள், கடைக்கு அனுமதி உள்ளதா? காவல் துறையினர் பாதுகாப்பு அனுமதி? உள்ளதா” என பல்வேறு கேள்விகளை கேட்டார்.

இந்த விசாரணையில், கடை நடத்துவதற்கான மாநகர தொழி உரிமம் கூட இவர்கள் பெறவில்லை. இதனால் கோபமடைந்த ஆட்சியர் உடனடியாக கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டர்.  பிறகு அங்கு ஏற்பட்டு இருந்த கூட்ட நெரிசல் சரி செய்யப்பட்டது.

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

திறப்பு விழா நாளில் காலையில் தொடங்கிய பிரியாணி கடை மதியம் சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடை திறப்பு விழா சலுகையாக 1 பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டதால் ஆவலுடன் பிரியாணி வாங்க வந்து பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்

click me!