ஒரு கையில் ஸ்டியரிங், செல்போன், ஹெட்போன், கியர், நடுவுல கொஞ்சம் ஸ்நேக்ஸ்; ஓட்டுநருக்கு சிறப்பு கவனிப்பு

By Velmurugan sFirst Published Jun 8, 2023, 5:16 PM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு பேருந்தை அதன் ஓட்டுநர் செல்போன் பேசியபடி அசாத்தியமாக இயக்கிய வீடியே வைரலான நிலையில், ஓட்டுரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணி நேரத்தில் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பணியின் போது ஓட்டுர்களுக்கு ஏதேனும் முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும் என்றால் உடன் பணியாற்றும் நடத்துநரை தொடர்பு கொண்டே ஓட்டுநருக்கு எந்தவித தகவலும் பரிமாறப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணிம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற அரசு நகரப் பேருந்தை பிரதீப்குமார் இயக்கியுள்ளார். அப்போது அரசின் உத்தரவை துளியும் மதிக்காமல் விதிமுறைகளை மீறி பேருந்தை இயக்கும் போதே மற்றொரு கையால் செல்போனை எடுத்து அதில் ஒரு நம்பரை பதிவு செய்து யாருடனோ ஒய்யாரமாக பேசத் தொடங்குகிறார்.

கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த பெண் சிசுவால் பரபரப்பு; காவல்துறை விசாரணை

மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் உண்டு வருகிறார். இதனைக் கண்ட பயணிகள் சிலர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் கையை விட்டுவிட்டு (ப்ளூடூத்) மாட்டிக்கொண்டு மீண்டும் பேசியபடி சென்றதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி கையை விட்டு பேருந்து இயக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இது போன்று பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கினால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாகி விடும். எனவே சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

நெல்லையில் அடிக்கின்ற வெயிலுக்கு கோவில் வளாகத்தில் கூலாக இளைப்பாறிய சிறுத்தை குட்டி

இதனைத் தொடர்ந்து செல்போன் பேசிக்கொண்டே சாகசம் செய்யும் தொணியில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பிரதீப் குமாரை பணியிடை நீக்கம் செய்வதாக வேலூர் அரசு போக்குவரத்க் கழக பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

click me!