தமிழகம் முழுவதும் நாளை போராட்டம்.. களத்தில் குதித்த இந்து முன்னணி கட்சி - மீண்டும் பரபரப்பு

By Raghupati R  |  First Published Aug 15, 2022, 5:30 PM IST

ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று புதுச்சேரியில் இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். சமீபத்தில் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்கவேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.  அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. திமுகவை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை!

கனல் கண்ணனின் பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் பெயரில் இரண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் கனல் கண்ணனை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியில் தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். 

மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !

இதற்கிடையே ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று புதுச்சேரியில் இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?

click me!