கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?

By Raghupati R  |  First Published Aug 15, 2022, 3:36 PM IST

ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக்  பள்ளி இயங்கி வருகிறது .  இப்பள்ளியின் மேல் தளத்திலேயே விடுதியும் இயங்கி வருகிறது.  இங்கு விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று தரை தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது . விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 'விடுதலை சிறுத்தைகள் சாதியின் அடிப்படையில் பார்க்காமல், நீதியின் அடிப்படையில் போராடக் கூடிய கட்சி. யாருக்கு பிரச்சினை என்றாலும் குரல் கொடுக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“முக்கிய துறை எல்லாம் போச்சு..” முதல்வரை டம்மியாக்கிய துணை முதல்வர் - மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளும்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிப்பதால், சின்னசேலம் விவகாரம் குறித்து திருமாவளவன் பேசமாட்டார் என சமூக வலைதளங்களில், சிலர் பணப்பயன்களுக்காக பேசி வருகின்றனர். மாணவியின் உயிரிழப்புக்கு நீதிவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது. பள்ளியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாணவி குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் காட்சி மட்டும் ஏன் வெளியாகவில்லை. 

மாணவியை கொலை செய்துவிட்டார்கள் எனக் கூறவில்லை, மாறாக சந்தேகத்தை தான் எழுப்புகிறோம். தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற முடிவு தெரியாமல் வழக்கு திசை மாறி கொண்டிருக்கிறது.பள்ளியில் பயிலும் மாணவி இறக்க நேரிட்டால், இவர்கள் முறையாக என்ன செய்திருக்க வேண்டும். அவர்களது பெற்றோரிடம் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும் சந்தேகங்களை போக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் வெளிப்படைத் தன்மை இல்லை.

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து, மாணவியின் இறப்பில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மாணவி உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் தாய்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களை மாதந்தோறும் ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்காக நாங்கள் இங்கு திரண்டுள்ளோம்.  கள்ளக்குறிச்சியில் திருமாவளவனுக்கு என்ன வேலை. மாணவியின் இறப்புக்கும் விசிகவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்கள், சாதி அடிப்படையிலேயே அனைத்தையும் பார்த்து பழக்கப்பட்டவர்கள். ஆனால், வி.சி.க சாதி அடிப்படையில் எதையும் பார்ப்பதில்லை. நீதி அடிப்படையில் தான் எதையும் பார்க்கிறோம். 

மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !

பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்டு போராடியது தான் விசிக-வின் வரலாறு. இது சாதி அடிப்படையிலான இயக்கமல்ல, சாதி ஒழிப்பு இயக்கம். இது இன்னமும் பலருக்கும் புரியவில்லை. சாதியை திருமாவளவனும் பார்க்க மாட்டான், விசிக தொண்டனும் பார்க்க மாட்டான். பள்ளி மாணவியின் சாவிற்கு நீதி வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் அடிப்படையான கோரிக்கை. மூன்றாவது மாடியில் இருந்து ஒரு பிள்ளை கீழே விழுந்தால் தலை, கால், கை அடிபட்டு உடையும்.  ஆனால், உடலிலேயே மிகவும் பாதுகாப்பான மார்பகப் பகுதியிலுள்ள இடது பக்க விலா எலும்புகள் அனைத்தும் உடைந்திருக்கிறது. 

ஓங்கி குறிப்பிட்டு அடித்தால் தவிர, அந்த பகுதி உடையாது. ஆனால் இடதுபுற விலா எலும்புகள் அனைத்தும் உடைந்திருக்கிறது என்றால்... யாரோ அடித்திருக்கிறார்கள். அவர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்திருக்க வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு வலுவான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்கள் என்பதுதான் சந்தேகம். பள்ளி நிர்வாகம் அவதூறு பரப்புவது போல, அந்த மாணவி கீழே குதித்து இறந்திருந்தால் கட்டாயம் தலைப்பகுதியில் சேதமடைந்திருக்கும். ஆனால் தலையில் காயம் இல்லை. மாணவியின் விலா எலும்புகள் உடைந்தும் மார்பகத்தில் பல்லால் கடிபட்ட காயங்கள் இருப்பதையும் ஏன் போஸ்ட் மாட ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை. 

இதை குறிப்பிடாத மருத்துவர்கள் மீது ஏன் விசாரணை நடைபெறவில்லை பள்ளியில் ஏற்பட்ட பொருட்களுக்கு காப்பீட்டுத் தொகை பெற்று புதிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் ஆனால் உயிரிழந்த மாணவியின் உயிரை திரும்ப பெற முடியுமா ? பள்ளி நிர்வாகிகள் மற்றும் அவர்களது மகன்கள் பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்கள் சம்பவம் நடந்த தினத்திற்கு முதல் நாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவிற்கு தாளாளரின் மகன்களுடைய நண்பர்களும் வந்துள்ளனர். அவர்களை ஏன் முழுமையாக காவல்துறையினர் விசாரிக்கவில்லை’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. சமூக விரோதிகளே ! பாஜகவை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்

click me!