தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரீவ்க்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேலானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : கரூரில் ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
28.05.2023 முதல் 31.05.2023 வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி வரை இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரையிலும் இடையிடையே 65 கி.மீ வரையிலும் வீசக்கூடும். கேரள – தென் கர்நாடக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இன்றும் நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்த 3 மாநிலங்களில் கனமழை கொட்ட போகுது.. ஆரஞ்சு அலர்ட் விடுத்த இந்திய வானிலை மையம்..