அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரி துறை அதிகாரிகள் தாக்கபட்ட சம்பவத்தை பார்க்கும் போது திமுக என்பது வன்முறை கட்சி என்று நிரூபித்துள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வரும் 29ம் தேதி கோவில்பட்டியில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூர் ராஜு செய்தியாளரிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது. காவல்துறை செயல்படாத துறையாக உள்ளது. காவல்துறையை தலைமை வகித்து செயல்படக்கூடிய முதலமைச்சர் கண்டும் காணாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிற அளவுக்கு மிகப் படுமோசமாக இருக்கிறது.
undefined
அதன் விளைவு தான் இன்றைக்கு தமிழகத்திலே போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா குட்கா பல்வேறு போதைப் பொருட்கள் தாராளமாக பள்ளி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது. அதை தடுப்பதற்கு இந்த அரசு திராணியற்ற அரசாக இருக்கிறது. 5 வயது குழந்தைகள் இருந்து பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக குறிப்பாக பள்ளியில் அதையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வராமல் இந்த அரசு மெத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு போஸ்கோ வழக்குகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட 5 வயது குழந்தைகள் இருந்து 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்ற கொடுமையான நிலை கேவலமான நிலையை தமிழகத்தின் நிலவி வருகிறது.
இன்றைக்கு அரசின் கையாளத்தனமா தான் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருந்த காரணத்தினால் தான் விஷ சாராயத்தின் மூலமாக தான் 22 பேர் உயிர் இழப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டு வேதனையான சம்பவம் ஒரே நேரத்தில் 22பேர் பலியான விஷ சாராயம் சாவு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது.
தமிழகத்தில் அறிவிக்கபடாத மின் வெட்டு மக்களை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரி துறை அதிகாரிகள் தாக்கபட்ட சம்பவத்தை பார்க்கும் போது திமுக என்பது வன்முறை கலாச்சார கட்சி என்று நிரூபித்து உள்ளது.. இதற்கு தகுந்த பலனை அடைவார்கள். ஒன்று பட்ட அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சசிகலாவிற்கு இது எல்லாம் தெரியாது போல.
செங்கோல் கொடுப்பதால் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது - சீமான் கருத்து
எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலின் போது வேட்பு தாக்கலில் முறைகேடு செய்து உள்ளார் என்ற வழக்கை சட்டப்படி எதிர் கொள்வார். பாராளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது அநாகரிகமான செயல். இவ்விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.