வேலைவாய்ப்பு என்ற பெயரில் போலி முகவர்கள்! நம்பி ஏமாற வேண்டாம் என தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் எச்சரிக்கை!

By Dinesh TG  |  First Published May 18, 2023, 11:20 AM IST

தூத்துக்குடியில் உள்ள வ உ சி துறைமுக ஆணையத்தில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக சில தனியார் ஏஜென்சிகள் மற்றும் முகவர்கள் பொதுமக்களிடம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனை நம்ப வேண்டாம் என துறைமுக ஆணையம் எச்சரித்துள்ளது.
 


வ உ சி துறைமுக ஆணையம் பொது மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வ உ சிதம்பரனார் துறைமுகம் ஆணையம் மத்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும். தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் காலி பணியிடம் நிரப்பும் நடவடிக்கை மத்திய அரசின் துறைமுக ஆட் சேர்ப்பு விதிகளை பின்பற்றி அரசின் கொள்கைப்படி செய்தித்தாள் விளம்பரம் மற்றும் துறைமுக இணையதளம் வழியாக அறிவிப்பு செய்யப்பட்டு வெளிப்படையான முறையில் மட்டுமே நடைபெறுகிறது.

எனவே பொதுமக்கள் துறைமுகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாத மோசடி நிறுவனங்கள், ஏஜென்சிகள் முகவர்கள் ஆகியோரை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், பொதுமக்கள் போலி நபர்களை நம்பி எவ்வித பதிவையும் செய்ய வேண்டாம் என தூத்துக்குடி துறைமுக ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

click me!