Watch : சாத்தான்குளத்தில் கேட்பாரற்று கிடந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல்! விடிய விடிய எடை போடும் போலீசார்!

Published : May 10, 2023, 04:16 PM IST
Watch : சாத்தான்குளத்தில்  கேட்பாரற்று கிடந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல்! விடிய விடிய எடை போடும் போலீசார்!

சுருக்கம்

சாத்தான்குளம் அருகே மறைவான தோட்டத்தில் மூட்டை மூட்டையாக 2500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் ஆள் அரவமற்ற ஒரு தோட்டத்தில் நின்று கொண்டிருந்த லோடு வாகனத்தில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை சிட்டி கீரைத்துறை காவல் நிலைய பகுதியில், கஞ்சா வியாபாரி ஒருவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சாத்தான்குளம் அருகே வேலன் புதுக்குளம் பகுதியில் தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பதாக கஞ்சா வியாபாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து அவற்றினை எடை போடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டு வருகின்றனர்.



சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் 2500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!