மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - ஆளுநர் தமிழிசை

By Velmurugan s  |  First Published May 27, 2023, 5:53 PM IST

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார்.


புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2023- 24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காத நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைகளுக்கு உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை குறித்து கேட்டறிந்த அவர், மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் இருப்பு மற்றும் ஊழியர்கள் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

மேலும் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது குறித்து மருத்துவ கல்லூரி இயக்குனர் உதயசங்கர் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துனை நிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து மாணவர்கள் யாரும் கவலை அடைய தேவை இல்லை. உறுதியாக மாணவர் சேர்க்கை நடைபெறும். 

Latest Videos

undefined

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் அரிகொம்பன்; 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு

மேலும் மாணவர் சேர்க்கை தாமதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் குறைபாடு உள்ளது, உபகரணங்கள் குறைபாடு உள்ளது என்பது எல்லாம் இல்லை. அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.

செங்கோல் கொடுப்பதால் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது - சீமான் கருத்து

click me!