வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ! இந்த 2 மாவட்டங்களை மழை புரட்டிப் போடப்போகுதாம் !!

By Selvanayagam PFirst Published Aug 30, 2019, 7:32 AM IST
Highlights

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை கனமழை புரட்டிப் போடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. 

இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இன்று  மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அனேக இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திருவள்ளூரில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. எடப்பாடி, கொங்கணாபுரம், சித்தூர்,சங்ககிரி, தேவூர் , செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

நாகை மாவட்டம் நாகை, சீர்காழி கொள்ளிடம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. திருச்சி மாவட்டம் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிகுளம், பொம்மனாப்பாடி, சிறுவலூர்,குரூர். சிறுவயலூர் சத்திரமனை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி , பாரதிபுரம், அன்னசாகரம், இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.  பொதுவாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!