தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித்துறை தகவல்!

By Manikanda Prabu  |  First Published May 3, 2024, 3:23 PM IST

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 86 மையங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, தேர்வு முடிவுகள் மே மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. இதனிடையே, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகின.

Latest Videos

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி மே மாதம் 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வழக்கமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவார். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளது.

எனவே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

CBSE Result 2024 : சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு எப்போது.? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்.?

தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகிற 6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவார் எனவும், அனுமதி கிடைக்காவிட்டால் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!