10 மாவட்டங்களில் கொட்டப்போகிறது கனமழை... மக்களே உஷார்!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 3:23 PM IST
Highlights

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வடதமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்  இன்று கனமழை பெய்யும் என்றும் நாளை டெல்டா மாவட்டங்கள், கடலுார், சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம். தர்மபுரி, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், கனமழை பெய்யும் என்று கூறியுள்ள புவியரசன், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிய புவியரசன், அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.  மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 9 ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள புவியரசன், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதி, கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை மறுதினம் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீச இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையிக்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!