Gold rate today | ஐந்து நாட்களாக எகிறிவரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

By Ganesh RamachandranFirst Published Nov 15, 2021, 10:02 AM IST
Highlights

கடந்த ஐந்து நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 11ம் தேதி மட்டும் ஒரு கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.

ஐந்து நாட்களாக ஏறு முகத்திலேயே இருந்து அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை இலை சற்று ஆறுதலளித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று மாற்றம் எதுவும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வர்த்தக நெருக்கடிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் முதலீடுகளை பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலிருந்து மாற்றத் தொடங்கியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைத்து காலகட்டத்துக்குமான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது. சர்வதேச அளவிலும் கொரோனாவுக்குப் பிறகு வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதைலீடு அதிகரித்துள்ளது. இந்தக் காரணங்களால் தான் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்றைய தங்கம் விலை மாற்றம் ஏதுமின்றி உள்ளது. ஒரு கிராம் தங்கம் (22 காரட்) நேற்றைய விலையான 4,656 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை (22 காரட்)  மாற்றம் ஏதுமின்றி 37,248 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் 5,079 ரூபாயாகவும், ஒரு சவரன் 40,632 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 71 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 71,700 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

click me!