சென்னையில் பிரபல ஓட்டலில் சாப்பிட சென்ற இடத்தில் கடை ஊழியர்களுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே மோத்ல ஏற்பட்டத்தில், சாப்பிட வந்த போலீஸ்காரரை கடை ஊழியர்கள் அடித்து ஓட விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்
சென்னை அண்ணா சாலை பெரிய மசூதி எதிரே உள்ள சங்கம் உணவகத்தில் இரவு சாப்பிட வந்த இரண்டு இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த வடநாட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள சங்கம் உணவகத்தில் காவல்துறையினர் பணியாற்றும் காவலர் தனது நண்பரோடு சாப்பிட சென்றுள்ளார். அப்போது வேறு இருக்கையில் அமரச் சொல்லி ஓட்டல் ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.ஊழியரிடம் நாங்கள் அதே இருக்கையில் தான் அமர்ந்து சாப்பிடுவோம் இங்கு அமர்ந்து சாப்பிடுவதால் என்ன தவறு என்று கேள்வி கேட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஓட்டல் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவலர் மற்றும் அவரது நண்பர் இருவரையும் சங்கம் உணவகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர் கட்டை கரண்டி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
போலீசார் விசாரணை
இதில் உணவகத்திற்கு உணவருந்த வந்த இரண்டு வாடிக்கையாளர்களில் ஒருவரான காவல்துறையில் பணிபுரியும் இளைஞருக்கு பின்பகுதியில் காயமும் அவரது சட்டை கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உணவருந்த வந்த பொதுமக்கள் போலீசுக்கு புகார் அளித்துள்ளனர். திருவல்லிக்கேணி காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வடமாநில இளைஞர்கள் மற்றும் காவலரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஓட்டலில் உணவருந்த வந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு உபசரிப்பு செய்ய வேண்டிய நிலையில் உதைத்து அனுப்பியது வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.