கவனத்திற்கு.. மதுப்பாட்டிலுக்கு ரூ.10 உயர்வு.. இன்று முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை..

By Thanalakshmi VFirst Published May 15, 2022, 2:33 PM IST
Highlights

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களைக் கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
 

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களைக் கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க: 300 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் பலி.. கல்குவாரி உரிமையாளர் கைது..

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்களை வனப்பகுதியில் வீசுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுக் கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மது பாட்டில்களை திரும்பப் பெறும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. 

அதன்படி இன்று முதல் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் 10 ரூபாய் அதிகம் பெறப்படும். காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து அந்த பத்து ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் அடாவடியாக மூட்டைக்கு 50 முதல் 55 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊழியர் நீக்கம்

click me!