#Breaking : வரும் 16 ஆம் தேதி மீண்டும் முழு ஊரடங்கு... அறிவித்தது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Jan 10, 2022, 9:36 PM IST
Highlights

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!