சென்னை மெட்ரோ ரயிலில் இலவச வை-பை சேவை !! டிஜிட்டல் மேப் விரைவில் அறிமுகம்…

By Selvanayagam PFirst Published Feb 21, 2019, 6:53 AM IST
Highlights

சென்னை மெட்ரோ ரயில்களில் விரைவில் இலவச வை -பை சேவை தொடங்கப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக டிஜிட்டம் மேப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
 

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் சின்னமலை வரையும் சுரங்கப்பாதையிலேயே மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயிலில்தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அவர்கள் பயணத்தின் போதே தங்களின் லேப்-டாப் உள்ளிட்ட சாதனங்களில் அலுவலக பணியை மேற்கொள்கின்றனர். 

ஆனால் சுரங்கப் பாதையில்மெட்ரோ ரயில் செல்லும் போது அவர்களுக்கு நெட் ஓர்க் வசதி கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் வேலைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.இதை கருத்தில் கொண்டுமெட்ரோ ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் வைபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

விரைவில் இந்த வசதி தொடங்கப்பட உள்ளது.இதன் மூலம் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் வைபை மூலம் தங்கள் பணிகளை எந்த தடங்கள் இன்றி செய்யலாம்.மற்ற பயணிகள் வைபை மூலம் தங்கள் செல்போனில் பாடல் ரசித்துக் கொண்டும்,ஆன்லைனில் இணைய தளத்தை பார்த்துக்கொண்டும் பயணிக்கலாம்.

மேலும் மெட்ரோ ரயில்களில் விரைவில் வழித்தட வரை படமும் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய வரைபடம் அடுத்தடுத்த ரயில் நிலையங்களுக்கு ஏற்ப மாறும் வகையில் டிஜிட்டல் முறையில் அனுமதிக்கப்படுகிறது. 

வரும் மாதங்களில் இந்த டிஜிட்டல் வரைபடம் நடைமுறைக்கு வர உள்ளது.இதில் வர்த்தக விளம்பரமும் இடம்பெறச் செய்து மெட்ரோ ரயிலின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய டிஜிட்டல் வரைபடம் 42 மெட்ரோ ரயில்களிலும் பொருத்தப்படுகிறது. முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 35 ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் கட்ட விரிவாக்க பணிகளுக்காக கூடுதலாக 10 ரயில்கள் வாங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

click me!