சென்னையில் இலவச டயாலிசிஸ் !! இன்றும் வாழும் மனித தெய்வங்கள் !!

By Selvanayagam PFirst Published Sep 13, 2018, 7:13 PM IST
Highlights

ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவர் சார்பில் ரெட்டேரி பகுதியில் 10 படுக்கைகள் கொண்ட இலவச டயாலிசிஸ் சென்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. சிறுநீரகங்கள் செயல்பாடு இழந்துவிட்ட நிலையில் ரத்தத்தைத் சுத்திரிக்க பெரும் செலவு செய்ய வேண்டிய நிலையில் இந்த இலவச டயாலிசிஸ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்தை வடிகட்டி, கழிவுகளை சிறுநீராக வெளியேற்றிவிட்டு, நல்ல ரத்தத்தை மீண்டும் உடலுக்கு உள்ளேயே செலுத்தும் வேலையை சிறுநீரகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறுநீரகம் செயலிழந்தால் கூட மற்ற சிறுநீரகம் நிலைமையை சமாளித்துக் கொள்ளும். இரண்டும் செயலிழந்தால் டயாலிசிஸ் மூலம் ரத்தத்தை சுத்திகரித்தே உயிர் வாழ முடியும்.

 

இது போன்ற இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்கள் உயிர்வாழ்வதற்காக கிடட்டத்தட்ட மாதம் ஒரு முறை ரத்தத்தை சுத்தப்படுத்த டயாலிசிஸ் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் கொஞ்சம் காஸ்ட்லியான இந்த சிகிச்சை ஏழை-எளிய மக்களுக்கு வசப்படுவதில்லை

.

 

தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்ய முடியாதவர்கள், அரசு மருத்துவமனைகளில் ரத்தத்தை சுத்திகரித்து வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக வருவதால் டயாலிசிஸ் செய்ய முடியாத நிலை ஏற்ப்டடுள்ளது.

 

இந்நிலையில் சென்னை பகுதி மக்களின் வசதிக்காக ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவர் சார்பில் ரெட்டேரி பகுதியில் 10 படுக்கைகள் கொண்ட இலவச டயாலிசிஸ் சென்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக சென்னை மாநகராடசி சுகாதாரத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவர் சார்பில் கடந்த திங்கட்கிழமை முதல் இலவச டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த மையத்தில் 10 படுக்கைகளும், 10 டயாலிசிஸ் மெஷின்களும் நிறுவப்பட்டுள்ளன. முற்றிலும் ஏசி செய்யப்பட்டுள்ள இந்த மையத்தில் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய் மதிப்பில் இலவச டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொது மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

 

ஏழை எளிய  மக்களுக்காக இது போன்ற வசதிகள் செய்தது தரும் வாழும் மனித தெய்வங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என பொது மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

click me!