
பொதுக்குழு பணி தீவிரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்ன காரணமாக ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு பிரிவாக அதிமுக பிர்ந்துள்ளது. இதனையடுத்து வருகிற 11 ஆம் தேதி பொதுக்கழு கூட்டம் நடத்த இபிஎஸ் தரப்பு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கடவுள்ளார். இதற்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக திறந்த வெளியில் மேடையும், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்காரும் இடமும் அமைக்கப்படுகிறது.
கால் தவறி கிழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது.அதற்காக பந்தல் அமைப்பது மேடைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் இந்த பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.வழக்கம் போலவே இன்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர் பார்வையிட்டனர்.இந்த பார்வையிடும் நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதம் கால் தடுமாறி கீழே விழுந்தார். கீழே வழுந்த நத்தம் விசுவநாதன் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
அதிமுக ரகசியங்களை திமுகவினரிடம் கூறிவருகிறார் கே.பி முனுசாமி.. பகீர் கிளப்பிய கோவை செல்வராஜ்.