செங்கல்பட்டு விபத்தில் 6 பேர் பலி... குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரணம் நிதி அறிவிப்பு..

Published : Jul 08, 2022, 03:19 PM ISTUpdated : Jul 08, 2022, 03:20 PM IST
செங்கல்பட்டு விபத்தில் 6 பேர் பலி... குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரணம் நிதி அறிவிப்பு..

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததனர். மேலும், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற்னர். 

மேலும் படிக்க:மதுராந்தகம் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. 6 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டம்‌ மதுராந்தகம்‌ அருகே பயணிகளுடன்‌ சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌கழகத்தின்‌ பேருந்து ஒன்று கன்டெய்னர்‌ லாரியின்‌ பின்புறம்‌ மோதியதில்‌ இரண்டு பெண்கள்‌ உட்பட ஆறு பேர்‌ உயிரிழந்தனர்‌ என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை இழந்து வாடும்‌ அவர்களின்‌ குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதல்களையும்‌ தெரிவித்துள்ளார்.

மேலும்‌, இதே விபத்தில்‌ காயமடைந்த ஒன்பது நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும்‌ மேலும் உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தலா ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும்‌, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய்‌ ஒரு லட்சமும்‌, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய்‌ ஐம்பதாயிரமும்‌ நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடல்...!

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!