ஊட்டி ரயிலில் வெளிநாட்டு ஜோடி தேனிலவு..! எத்தனை லட்சம் தெரியுமா..?

By manimegalai aFirst Published Sep 1, 2018, 12:40 PM IST
Highlights

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரயிலில், ரூ.4 லட்சம் செலுத்தி, இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாட்டு ஜோடி, நேற்று தேனிலவு கொண்டாடி அசத்தியுள்ளது. முதல்முறையாக, அந்த ரயிலில் இருவர் மட்டுமே பயணித்தனர்.
 

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரயிலில், ரூ.4 லட்சம் செலுத்தி, இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாட்டு ஜோடி, நேற்று தேனிலவு கொண்டாடி அசத்தியுள்ளது. முதல்முறையாக, அந்த ரயிலில் இருவர் மட்டுமே பயணித்தனர்.

திருமணம் என்றாலே பூரிப்பு; அதற்கு காரணமாக இருப்பது தேனிலவு. ஒவ்வொருவரும் தேனிலவை மறக்க முடியாத அளவுக்கு கொண்டாடி, காலம் முழுவதும் அந்த நினைவில் திளைத்து மகிழ்வார்கள். தண்ணீருக்குள் தேனிலவு, வானில் பறந்தபடி தேனிலவு என, இதற்காக பல லட்சங்களை செலவிட்டு கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதேபோல், ஊட்டி மலை ரயிலில், ரூ.4 லட்சம் செலவிட்டு, இங்கிலாந்து இளம் ஜோடி, தேனிலைவை கொண்டாடி மகிழ்ந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கிரகாம், 30; போலந்து நாட்டை சேர்ந்தவர் சில்வியா, 27 ஜோடிக்கு, ஆகஸ்ட் 11ல் திருமணம் நடந்தது.

தேனிலவுக்கு ஊட்டிக்கு வந்த இவர்கள், ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல சிறப்பு மலை ரயிலை முன்பதிவு செய்தனர். இதற்காக மட்டும் ரூ. 2.85 லட்சம்; இதர செலவுகளை சேர்த்து ரூ. 4 லட்சம் தொகையை ரயில்வே நிர்வாகத்துக்கு செலுத்தினர். 

இதை தொடர்ந்து, நேற்று காலை நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், இத்தம்பதிக்காக மட்டும் நேற்று காலை இயக்கப்பட்டது. இவ்வாறு சிறப்பு ரயில் இயக்கப்படுவது இதுவே முதல்முறை. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு மூன்று பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் புறப்பட்டது. வழக்கமாக மூன்று பெட்டிகளில் 153 பேர் பயணம் செய்யக்கூடிய ஊட்டி சிறப்பு மலை ரயிலில், இங்கிலாந்து தம்பதி மட்டும் பயணம் செய்தனர்.  

இதுகுறித்து கிரகாம் கூறுகையில், முதல் முறையாக இந்தியா வந்துள்ளேன். ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தவாறு, தேனிலவு கொண்டாட விரும்பினோம். இயற்கை அழகை பார்த்தவாறே கொண்டாடிய தேனிலவு, மகிழ்ச்சியாக அமைந்தது. அமைதி நாடான இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

click me!