ஜெ. இறப்பு விவகாரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் இருந்தால் அதனை பரிசோதனை செய்துக்கொள்ளலாம் என நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
ஜெ. இறப்பு விவகாரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் இருந்தால் அதனை பரிசோதனை செய்துக்கொள்ளலாம் என நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நீதியரசர் ஆறுமுகசாமி ] கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி.. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
undefined
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் அம்மாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மி.கி., பி.பி. 160, கிரியேடின் 0.82, ஒ.பி சிட்டி, சுகர், பிபி இதற்கு சர்ஜரி செய்யலாமா என்பதுதான் முக்கிய விசயம். அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். லேப்டாப் முன் உட்காருங்கள், எழுதுங்கள்.
இதையும் படிங்க: போதை ஒழிப்பு மையத்தில் வைக்கப்பட்ட தொலைக்காட்சி… சிகிச்சைக்கு வருபவர்களின் மன இறுக்கத்தை புதுவழி!!
இதனை கம்ப்யூட்டரில் அடியுங்கள். இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பது போல ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.