பால் உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அந்நிய நாட்டு கலப்பின மாடுகளை அதிகமாக வளர்த்து வரும் இன்றைய நிலையில், அழியும் நிலையில் உள்ள சிறப்பு வாய்ந்த பல நாட்டு மாட்டு இனங்களை காத்திட வேண்டுமென கொங்கு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி
ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை அது சட்ட விதிவிலக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மெரினா புரட்சி தமிழர்களின் ஒற்றுமையை காட்டியது. பள்ளி, கல்லூரி என அனைத்து இடத்திலும் இதற்கான கூக்குரல் விண்ணை எட்டியது. தமிழர்களின் கலாச்சாரத்தை காக்க இன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கொடுத்த தீர்ப்பு மிகவும் வரவேற்புக்குரியது. நமது பழைய கலாச்சாரங்களை மீட்டெடுக்க இது உத்வேகமாய் அமையும்.
நாட்டு மாடுகளை காக்கனும்
தற்போது பால் உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அந்நிய நாட்டு கலப்பின மாடுகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். இன்றைய நிலையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் பால் தேவைக்கு நாம் கலப்பின மாடுகளை சார்ந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதே நேரத்தில் நாட்டு மாட்டு இனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இந்த சந்தோசமான நேரத்தில் அழியும் நிலையில் உள்ள சிறப்பு வாய்ந்த பல நாட்டு மாட்டு இனங்களை காத்திட வேண்டுமென்று தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும், விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் அழிந்து வரும் நாட்டு மாடு மற்றும் காளை இனங்களை காக்க ஒரு விரிவான கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்