
தமிழ்நாட்டில் அமைக்கப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ராணுவ தொழில் பெருவழித்தடத்தை செயல்படுத்தும், முகமை நிறுவனமாகவும் டிட்கோ செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப ராணுவம் மற்றும் விமானத்தொழில் சார்ந்த தொழில் பூங்காக்களை அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் ராணுவ தொழிற் பூங்கா அமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. பாதுகாப்பு துறையில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும், அதற்கான முதலீடுகளை பெறுவதற்கும் சிறந்த இடமாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் வான்வெளி தொழிற்பூங்காவும் கோவையில் அமைய உள்ளது.
இதையும் படிங்க : இளம் கால்நடை பட்டதாரிகளுடன் போட்டிப் போட சொல்வதா..! 454 உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்திடுக- ஓபிஎஸ்
அந்த வகையில் கோவை மாவட்டம் வாரப்பட்டி பகுதியில் சுமார் 400 ஏக்கர் ராணுவ தொழிற்பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதே போல் சூலூர் அருகே மற்றொரு ராணுவ தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு பாதுகாப்பு துறையில் பாதுகாப்பு மற்றும் வான்வழி தொழிலை துரிதப்படுத்துதல் என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மாணவர்கள் மற்றும் தொழில்துறையினர் கலந்துகொண்டனர். இதில் டிட்கோ நிறுவனத்தின் சிறப்பு செயலாளரும் திட்ட இயக்குனருமான கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர் “ வாரப்பட்டி பூங்காவுக்கு 400 ஏக்கர் நிலமும், சூலூர் பூங்காவுக்கு 200 ஏக்கர் நிலமும் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால், உள்நாட்டில் ஆயுதங்களை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி மதிப்புள்ள உள்நாட்டு தயாரிப்புகளைஉற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கள்ளச்சாராயம் குடித்து இறக்கணும்.. குடும்பமே நினைக்கும் அளவுக்கு நிதி கொடுக்கறீங்களே நியாயமா.. செல்லூர் ராஜூ