நல்லா தெரிஞ்சுக்கோங்க… தனியாக யாரும் யானையை வச்சிருக்க கூடாது.. ஐகோர்ட் அதிரடி

By manimegalai aFirst Published Sep 24, 2021, 8:50 PM IST
Highlights

இனி… தனிநபர்கள் கட்டுப்பாட்டில் யானைகள் இருக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

சென்னை: இனி… தனிநபர்கள் கட்டுப்பாட்டில் யானைகள் இருக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

யானைகள் என்றால் யாருக்கு தான் பிரியம் இருக்காது… சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானையை எப்போது பார்த்தாலும் ஆனந்தம் காண்பது உண்டு. அதிலும் குட்டியானைகளின் சேட்டைகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

இந் நிலையில் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் யானைகள் இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. கோவில் யானைகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் இப்படி ஒரு அதிரடியை நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது.

யானைகள் வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகள், தனியா கட்டுப்பாட்டில் உள்ள யானைகள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகள் விவரங்கள் வீடியோவாக செய்யும் பணிகள் நடப்பதால் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியது.

அதை ஏற்ற நீதிபதிகள், இனி யாரும் தனியாக யானைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

click me!