உதயநிதி எனக்கு துணையாக இருக்கிறார் எனக்கு எந்த சிரமமும் இல்லை - அமைச்சர் சாமிநாதன்

By Velmurugan sFirst Published Dec 21, 2022, 5:44 PM IST
Highlights

சென்னையில் நடைபெற்ற திரைத்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் சாமிநாதன் திரைத்துறையைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருப்பதால் எனக்கு எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
 

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, கலைஞானம், ஆர் கே சுரேஷ், ஆர் பி சவுத்ரி, தேனாண்டாள் முரளி, நடிகர் ராதா ரவி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, தமிழ் திரைப்படங்களில் சுமார் 25 வருடத்திற்கும் மேலாக பயணிப்பதெல்லாம் பெரிய சாதனை. இந்த துறையில் முதல்வர் என்னை பணி அமர்த்திய போது, என்னிடம் சினிமா தயாரிப்பாளர்கள் பற்றி அதிகம் பேசுவார். உங்கள் குறைகளை கேட்க நான் இருக்கிறேன். நான் ஒரு விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன். விவசாயத்தை போலதான் சினிமாவும். அந்த கஷ்டத்தை நான் உணர்கிறேன்.

பருப்பு வடைக்குள் இருந்த சுண்டெலி; வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஏற்கனவே தொழில் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நிலையில், கொரோனா பெரிய இடராக இருந்தது. கொரோனாவில் மிகவும் பின் தங்கிய தொழிலில் சினிமா முக்கியமான ஒன்று. சங்கத்தில் நிதி இல்லை என்று சொன்னார்கள். கலைஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்கும் இந்த அரசு நிச்சயம் உதவி செய்யும்.

சினிமா துறையில் இருந்து அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும், உதயநிதி ஸ்டாலின் துணை இருப்பதால் எனக்கு மிகவும் சிரமமாக இருக்காது. நீங்கள் சொல்லும் கோரிக்கைகள் எனக்கு கஷ்டமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் உதயநிதி இந்த துறை என்பதால் சிரமம் குறையும். 2016 முதல் 2021 வரை நிலுவையில் உள்ள சிறந்த கலைஞர்களுக்கான நிலுவையில் உள்ள விருதுகளை நிச்சயம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

உச்சநீதிமன்றத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

சிறப்புக் காட்சிக்கு அனுமதிப்பது தொடர்பாக முன்னணி நடிகர்கள் தரப்பில் இருந்து யாரும் இதுவரை கோரிக்கைகள் வைக்காததால் அதை பற்றி இன்னும் அறிவிப்பு எதும் இல்லை. மேலும் அப்படி கோரிக்கை வைப்பின் நிச்சயம் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும். காரணம் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதற்காக சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

click me!