
சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை ஆய்வு கூட்டம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாட்டில் திமுக அறிவித்த படி கூட்டுறவு வங்கியில் வைக்கபட்ட 5 சவரன் வரையிலான நகைகடன்கள் தற்போது வரை 5 ஆயிரத்து 13 கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.
கடந்த ஆண்டு விவசாய கடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 292 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகவும், இந்தாண்டு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் 12,000 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 8941.13 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கொடுக்கபட்டுள்ளது. இதன் மூலம் 11.72 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
பருப்பு வடைக்குள் இருந்த சுண்டெலி; வாடிக்கையாளர் அதிர்ச்சி
மேலும் மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 7ம் தேதி கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது. இது கூட்டுறவு சங்க தேர்தல் முறையை சீர்த்திருத்தம் செய்தல், கூட்டுறவு சங்கத்தில் வெளிப்படை தன்மை, நிர்வாகத்தை வலுபடுத்துதல் தொடர்பாக இருந்தது,
நம்ம ஸ்கூல் திட்டத்தில் ஒரே நாளில் குவிந்த ரூ.50 கோடி; கல்வியாளர்கள் பாராட்டு
இது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் நிலைகுழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பிடிங்கி வருகிறது, கூட்டுறவு திருத்த சட்ட மசோதா விவகாரத்தில் மாநில உரிமையை தமிழக முதலமைச்சர் விட்டுகொடுக்கமாட்டார்” என தெரிவித்துள்ளார்.