மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையா? சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Dec 21, 2022, 1:02 PM IST
Highlights

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆதார் இணைப்பு சமூக நலத் திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகவும் எனவே மின் கட்டண மானியம் பெற ஆதாரை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க;- ஃபுல் மப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போதே துண்டித்த காதலி.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபரீத முடிவு.!

இந்த வழக்கு விசாரணையின்போது இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, வாடகைதாரர்கள் மானியம் பெறும் விவகாரமானது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை. மீட்டர் அடிப்படையில்தான் ஆதார் இணைக்கப்படும் என்றார். மேலும் அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

அதில், அடிப்படை ஆதரமற்ற முறையில் மனுத்தாக்கல் என கூறி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் படிங்க;-  தனியா ரூம்ல நீ மட்டும் தான் இருக்க.. வாட்ஸ் அப் வீடியோ கால்ல டிரஸ்ஸை கழற்றி காட்டுறியா கேட்ட மாணவன் அரெஸ்ட்.!

click me!