"துப்புக்கெட்ட மீடியாக்கள்..!" நியாயம் கேட்கும் பெற்றோர்கிட்ட இப்படியா பேசுவீங்க..? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

By Raghupati RFirst Published Jan 22, 2022, 7:23 AM IST
Highlights

தஞ்சாவூர் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் தமிழ் மீடியாக்களை கிழித்து தொங்கவிட்டு கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

தஞ்சை அருகிலுள்ள மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம்செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் பாஜக , இந்து முன்னணி போன்ற கட்சியினர் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சிதான். உடனே நிர்வாகிகளைக் கைதுசெய்து பள்ளி மற்றும் விடுதியை இழுத்துமூடவேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார்.

விசாரணை முடிந்ததும் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் சித்தி மற்றும் தந்தை, ‘எங்க பொண்ணை கட்டாயமா மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி இருக்காங்க.பாத்ரூம் கழுவுறதுன்னு ரொம்ப துன்புறுத்திட்டாங்க. எங்க பொண்ணுக்கு நியாயம் வேணும். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணாதான், நாங்க உடலை வாங்குவோம். எங்க பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க பொண்ணு தான் முதலும், முடிவா இருக்கணும்.

ஒரு பெண் குழந்தைய மதம் மாற சொல்லி துன்புறுத்தி சாகடிச்சுட்டானுக.. நேர்மையா பள்ளி நிர்வாகத்தை கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் விட்டுட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர பார்த்து நீங்க ஏன் முன்னாடியே சொல்லலனு முன்வாய் பணியாள aka RSBமீடியா கேள்வி கேட்குது.. pic.twitter.com/9bGNJJEfa8

— Umapathy Shiva (@umapathyshiva)

 

வேற எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கவே கூடாது. கடந்த 2 வருடமாக இந்த கொடுமை நடந்துருக்கு. மதமாற சொன்ன ராக்லின் மேரி, சகாயமேரி இருவரையும் கைது செய்யனும்’ என்று கூறினார்கள்.  ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு வலுக்கட்டாயமாக வேண்டுமென்றே,  அநாவசிய கேள்விகளை மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தற்கொலை செய்த மாணவியின் சித்தி பேசும் போது, மதமாற்றம் நடந்து 2வருசமா பன்றாங்கன்னு சொல்றீங்க, அப்போ ஏன் கேட்கல ? நீங்க ஏன் கேட்கல ? மதமாற்றம் பண்ணாங்கன்னு சொல்றீங்களே டிசி வாங்கியிருக்கலாம்ல’ என்று மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

 

காசுக்காக குடும்பத்தையே கூட்டிக் கொடுக்கக் கூட தயங்காத மாமா பசங்களா pic.twitter.com/s2P1y2F67a

— SarvanLSR 🚩🚩 (@sarvan_lsr)

நெட்டிசன் ஒருவர், 'காசுக்காக குடும்பத்தையே கூட்டிக் கொடுக்கக் கூட தயங்காத மாமா பசங்களா. பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. ஆயிரம் தொழில் இருக்கு. அதுக்கு இந்த புனிதமான ஜர்னலிசத்தை  பயன்படுத்தாதீங்க' என்று பதிவிட்டார்.

இங்க கேள்வி கேட்க வக்கிருக்குற ஊடக அன்பர்கள் மதமாற்றத்துக்கு எதிரா கேள்வி கேட்டு அறுத்து தள்ளின நடுநிலை நாயகன் மாறி வன்டாங்க. இதே வேற்று மத பெண்ணின் மரணமாக இருந்தால் இந்த திடீர் நல்லவங்களோட குரல் அப்படியே கன்னியாகுமரிலேந்து காஸ்மீர் வரிக்கும் ஒலிச்சிருக்கும்.

— Prasath (@Suryah_Prasath)

'இங்க கேள்வி கேட்க வக்கிருக்குற ஊடக அன்பர்கள் மதமாற்றத்துக்கு எதிரா கேள்வி கேட்டு அறுத்து தள்ளின நடுநிலை நாயகன் மாறி வன்டாங்க. இதே வேற்று மத பெண்ணின் மரணமாக இருந்தால் இந்த திடீர் நல்லவங்களோட குரல் அப்படியே கன்னியாகுமரிலேந்து காஸ்மீர் வரிக்கும் ஒலிச்சிருக்கும்' என்று ஆளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார்.

தமிழக மீடியா தொடர்ந்து திமுக போடும் எலும்பு துண்டுக்கு வாலாட்டுவதை வரவேற்கிறேன். வாங்குற காசுக்கு அப்படி தான் நியாயமாக நக்கி பிழைக்கனும் .. அப்படியே அந்த குழந்தை பேசின வீடியோவயும் கிராஃபிக்ஸ்னு எப்படியாவது கதகட்டி விட்டுடுங்க' என்று மீடியாவை பங்கமாக  கலாய்த்து இருக்கிறார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் வருவதை போல 'கரடியை காறித்துப்புனா கூட...' என்றும், வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளாலும் தமிழ் மீடியாக்களை கண்டபடி கழுவி கழுவி ஊதிக்கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

click me!