டெங்கு காய்ச்சால் திருப்பத்தூரில் 4 வயது சிறுமி உயிரிழப்பு.. பெற்றோர்களே அலட்சியமா இருக்காதீங்க..

By Ramya s  |  First Published Sep 28, 2023, 10:50 AM IST

சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு, மலேரியா போன்ற பருவகால நோய்களின் பரவல் அதிகரிக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக டெங்கு பாதிப்பு பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு நோயாளிகளுக்கு தனி கவனம் செலுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Latest Videos

undefined

திருப்பத்தூர் மாவட்டம்  சிவராஜ்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி அபிநிதி உயிரிழந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் சுமித்ரா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இதில் கடந்த 23-ம் தேதி யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

தேங்காய் எண்ணெய் டெங்குவை தடுக்குமா? உண்மையான விளக்கம் இதோ..!!

இந்த நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிநிதி நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் உடலை பெற்ரோரிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு உறுதியான நிலையில், அதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

டெங்குவின் அறிகுறிகள் என்னென்ன?

டெங்கு காய்ச்சல் பொதுவாக நோய்த்தொற்றுக்கு 4-10 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டெங்குவின் ஆரம்ப அறிகுறிகளைக் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அறிகுறிகள் மாறுபடும் போது, டெங்கு தொற்றைக் குறிக்கும் தனித்துவமான அறிகுறிகளை கவனிக்க வேண்டியது அவசியம். இதில் திடீர் உயர்தர காய்ச்சல், கடுமையான தலைவலி (குறிப்பாக கண்களுக்குப் பின்னால்), உடல்வலி, மூட்டு வலி மற்றும் சில நாட்களுக்குப் பிறகு தோன்றும் சொறி ஆகியவை அடங்கும். மற்ற அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

click me!