பண்ருட்டி டெப்போவில் திடீரென பற்றி எரிந்த அரசுப் பேருந்துகள்; அதிகாரிகள் விசாரணை

By Velmurugan s  |  First Published Sep 28, 2023, 10:37 AM IST

பண்ருட்டி அரசுப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசுப் போக்குவரத்துப் பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து கடலூர், வடலூர், விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பழைய ஏலம் விடப்பட்ட அரசுப் பேருந்துகள் பணிமனையின் ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

பழைய பேருந்துகளில் இருந்து பயன்படும் வகையில் இருக்கக் கூடிய பொருட்களை வெல்டிங் இயந்திரம் மூலம் தனியாக பிரித்து எடுக்கும் வேலை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றைய தினம் பழைய பேருந்துகளில் பொருட்களை அகற்றிவிட்டு மாலையில் பணியாளர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், இரவு 12 மணியளவில் பேருந்தில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை பார்த்த பணிமனை ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் 3 பழைய பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!