பண்ருட்டி அருகே 2 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞனை இளம் பெண் காவலர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல் என் புரம் புதுநகரைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது 27). இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி படிக்கும் மாணவி அசினா (19) என்பவரை ஆசை வார்த்தை கூறி இரண்டு வருடமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெண்ணின் உறவினர்கள் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகர் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் அரசுக்கு பணம் மிச்சமாகும்; ராமதாஸ் பேட்டி
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இளம் பெண்ணை காதலித்து ஏமாற்ற நினைத்தது உண்மை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினரே காவல் நிலையம் எதிரே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்தனர். திருமணத்தில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் இனிப்புகள் வழங்கி மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.