காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. இதுதான் காரணமா?

Published : Sep 24, 2023, 02:50 PM IST
காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. இதுதான் காரணமா?

சுருக்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து(27). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (21). இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

கடலூர் அருகே நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து(27). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (21). இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் செல்வகுமாரி கர்ப்பமடைந்ததை அடுத்து இருவீட்டாரும் இவர்களை ஏற்றுக்கொண்டனர். தற்போது செல்வகுமாரி 9 மாத கர்ப்பணியாக இருப்பதால் அடுத்த வராம் வளைகாப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. 

இதையும் படிங்க;- 9ம் வகுப்பு மாணவியை 6 மாதம் கர்ப்பமாக்கிய மாணவன்.. வீடு புகுந்து போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

நேற்று முன்தினம் திடீரென செல்வகுமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவரிடம் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த செல்வகுமாரி திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  என் பொண்டாட்டியோட பழகுவதை இத்தோட நிறுத்திக்கோ சொன்ன கணவர்.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த பயங்கரம்.!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!