Asianet News TamilAsianet News Tamil

தேங்காய் எண்ணெய் டெங்குவை தடுக்குமா? உண்மையான விளக்கம் இதோ..!!

கொசுவால் முழங்காலுக்கு மேல் பறக்க முடியாது என்பதால் தேங்காய் எண்ணெயை தடவுவதன் மூலம் டெங்குவை தடுக்கலாம் என்று ஒரு செய்தி பரவி உள்ளது. இது உண்மையா? முழு விளக்கம் இங்கே.. 

here fact check can applying coconut oil on feet prevent dengue fever in tamil mks
Author
First Published Sep 26, 2023, 6:58 PM IST | Last Updated Sep 26, 2023, 7:01 PM IST

தற்போது மக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன என்று சமூகவலைதளத்தில் இது குறித்த செய்தி பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய்யை தடவினால் டெங்குவை தடுக்கலாம் என்ற செய்தி வைரலாகி வருகிறது. இது உண்மையா? முழு விளக்கம் இங்கே..

தேங்காய் எண்ணெய்யை தடவினால் டெங்குவை தடுக்கலாமா?
தேங்காய் எண்ணெயை முழங்கால்களுக்குக் கீழே தடவினால் டெங்கு காய்ச்சலைத் தடுக்கலாம் என்ற வைரலான செய்தி போலியானது. ஒருவேளை அந்த கொசு தேங்காய் எண்ணெய் வாசனை பிடிகாமல் இருப்பதால் அது கடிக்காமல் இருக்கலாமேயன்றி அது நிரந்தர தீர்வு அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

டெங்கு காய்ச்சல்:
பொதுவாகவே, டெங்கு காய்ச்சல் கொசுக்கலால் தான் வருகிறது. அதிலும் குறிப்பாக டெங்குவை பரப்பும் கொசுவால் அதிக உயரம் பறக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் இவை முட்டி வரை மட்டுமே கடிக்கும் என்பது நிஜமல்ல. இந்த வகை கொசுக்கள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை என எல்லா வயதினரையும் கடிக்கும். 

இதையும் படிங்க:  டெங்கு காய்ச்சலா? இரத்த தட்டுக்கள் அதிகரிக்க...விரைவில் மீள 'இந்த' உணவுகள் மட்டும் சாப்பிட்டால் போதும்.!!
 
சுற்றுப்புறத்தை தூய்மை: 
டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்பதால், வாளிகள், கிண்ணங்கள், பூந்தொட்டிகள், குவளைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வது நல்லது. ஏனெனில், 
தேங்கி நிற்கும் தண்ணீர் கொள்கலன்களில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுவால் தான் டெங்கு ஏற்படுகிறது. பருவமழையின் காலநிலை கொசுக்கள் உற்பத்திக்கு ஏற்ற சூழலாக அமைகிறது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

இதையும் படிங்க: டெங்குவை குணப்படுத்த இந்த 5 இலைகள் போதும்.. இயற்கையான முறையில் ரத்த அணுக்களை அதிகரிக்கலாம்.

சாறுகள்: 
சித்த மருத்துவ அடிப்படையில்,   நிலவேம்புக் கசாயம், மலைவேம்புச் சாறு, பப்பாளிச் சாறு போன்ற சாற்றினை டெங்கு ஆரம்ப நிலையில் 10 மில்லி மட்டும் குடிக்கலாம். அது போல் சித்த மருத்துவத்தில் டெங்குவிற்கு அமுக்குராச்சூரணம், ஆடாதோடா இலைச்சாறு போன்றவை கொடுக்கப்படுகிறது. பொதுவாகவே டெங்குவின் அறிகுறிகள் மாறி மாறி வருவதால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது மிகவும் நல்லது. அதுபோல் நீங்கள் நிலவேம்பு கஷாயத்தை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. மேகும் இது ஒரு நோய் தடுப்பு மருந்தாகும்.

உணவு முறை:

  • டெங்கு சமயத்தில் நீங்கள் சூடான உணவை சாப்பிடுவது நல்லது.
  • டெங்குவால் பாதிக்கப்பட்டோர் காரமுள்ள உணவுகளைக் குறைப்பது மிகவும் நல்லது.
  • பதப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
  • பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் நெல்லிக்காய் சாறை குடிக்கலாம்.
  • டெங்கு வந்த பிறகு உடல் மிகவும் சோர்வாக இருப்பதால் அச்சமயத்தில் நீங்கள் சாத்துக்குடி போன்ற பிற பழங்களின் சாறுகளை குடிப்பது நல்லது.
  • ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் காய்கறி சூப்பில் மிளகு சேர்த்து குடிப்பது குடிக்கலாம்.
  • அது போல் கஞ்சி வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
  • மேலும் இச்சமயத்தில் நீர்ச்சத்து அதிகம் தேவையென்பதால்  தண்ணீர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை அதிகமாக எடுத்து கொள்வது நல்லது.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios