100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Sep 28, 2023, 10:15 AM IST

100 வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்து முதியவர் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட முனியூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன் (வயது 55). இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவி இருவரும் முனியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 100 நாள் வேலை பணிகள் முனியூர் ஊராட்சியில் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று 100 நாள் வேலை முனியூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள சாலையில் நடைபெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாலை ஓரத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்த ராசப்பன் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடன் வேலை பார்த்தவர்கள் உடனடியாக ராசப்பன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்ற நிலையில் தொடர்ந்து அவர் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். இதனை அடுத்து சக ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோ வெளியிட்ட நபர் யார்.? பெயரை வெளியிட்டு தனிப்படை அமைத்த டிஜிபி

இருப்பினும் ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ராசப்பனை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!