சிறுமி உயிரிழந்த விவகாரம்; தமிழகம் முழுவதும் அதிரடி காட்டும் உணவு பாதுகாப்புத்துறை

By Velmurugan s  |  First Published Sep 20, 2023, 9:45 AM IST

திருவாரூரில் உள்ள அசைவ உணவகங்களில் நகராட்சி ஆணையர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் 55 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட பனகல் சாலை பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை, தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் அசைவ உணவகங்களில் திருவாரூர் நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

அரசு மருத்துவமனையும், அரசு பள்ளியும் சாமானிய மக்களுக்கு பலன் தரவேண்டும் - தமிழிசை விருப்பம்

இந்த திடீர் சோதனையில் இந்த உணவகங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, இறால், மீன் மற்றும்  மசாலா பொருட்களின் தரத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 55 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி, இறால், மீன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.  

IPS படித்தவனை ஆடு மேயக்க வைக்கும் இயக்கமல்ல; ஆடு மேய்த்தவமனை IPS ஆக்கும் இயக்கம் - பாஜகவை தெரிக்கவிடும் அதிமுக

மேலும் உணவகங்கள்  பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினர். தரமான உணவுகள் வழங்கப்படாத பட்சத்தில் உணவகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் திருவாரூர் நகராட்சி ஆணையர் மல்லிகா உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் கெட்டுப்போன இறைச்சிகளில் இருந்து தொற்று பரவாமல் பாதுகாப்பான முறையில் அழிப்பதற்காக நகராட்சி அலுவலர்கள் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

click me!