கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது.. டிசியை எரித்தது ஏன்..? சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி

By Thanalakshmi V  |  First Published Jul 18, 2022, 11:20 AM IST

கள்ளக்குறிச்சி வன்முறை திடீர் கோபத்தில் நிகழ்ந்தது இல்லை என்று திட்டுமிட்டு நடந்த வன்முறை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். கள்ளிக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை கண்டறிய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது யார் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்து விட்டு, போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று மாணவியின் தந்தை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் மாணவர்களின் டிசியை எரிக்க உரிமை அளித்தது யார் எனவும் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாக தெரிகிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே பெற்றோருக்கும் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மனுதாரர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் மர்ம மரணம் குறித்தான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:Explainer:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறந்த விவகாரம்! குற்றவாளிகள் யார்? முழு தகவல்!

சின்னசேலத்தில் நடந்தது திடீர் கோபத்தில் நடத்த வன்முறை அல்ல. அது திட்டமிட்ட சம்பவம் என்று நீதிபதி சதிஷ்குமார் கருத்து தெரித்துள்ளார். தனியார் பள்ளியில் மாணவர்களின் டிசியை எரிக்க உரிமை தந்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். மேலும் மாணவியின் மரணம் தொடர்பான விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் நோக்கம் இல்லை என்றும் எப்.ஐ.ஆர் மாற்றப்படுகிறது என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.ஆனால் சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்று நீதிபதி சதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது என்றும்  சிலர் மட்டுமே இந்த வன்முறைக்கு காரணமில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையா?குழப்பத்தில் மாணவர்கள்,பெற்றோர்கள்

அமைதியாக நடைபெற்ற போராட்டம் திடீரென்று வன்முறையாக வெடித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் கள்ளிக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை கண்டறிய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புபடை அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் மாணவியின் தந்தை தனது வழக்கறிஞருடன் உடல் மறுகூராய்வின் போது உடன் இருக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். மறு உடல் கூராய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உடல் கூராய்வுக்கு பிறகு மாணவியின் உடலை எதிர்ப்பின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாணவியின் தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கை ஜூலை 29 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையை துண்டியதாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்தவர் அதிரடி கைது..!

click me!