உயிரிழந்த மகனை கட்டித்தழுவி அழுது.. அதே இடத்தில் மாரடைப்பால் துடிதுடித்து இறந்த தாய்.. செங்கல்பட்டில் சோகம்.!

By vinoth kumar  |  First Published Jul 18, 2022, 10:03 AM IST

செங்கல்பட்டு அருகே 11ம் வகுப்பு படித்து வந்த மகன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் கதறி அழுத தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


செங்கல்பட்டு அருகே 11ம் வகுப்பு படித்து வந்த மகன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் கதறி அழுத தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, சாந்தி தம்பதிக்கு ஜெய்கணேஷ், தருண் என்ற இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில், சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் ஜெய்கணேஷ் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு ஜெய்கணேஷ் மயக்கமடைந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ராஜபக்சேக்கு வந்த நிலைமைதான் எடப்பாடியாருக்கும் வரும்.. டிடிவி.தினகரன் சரவெடி.!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஜெய்கணேசை தூக்கிக்கொண்டு சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெய்கணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- பைக் மீது லாரி பயங்கர மோதல்.. மருமகன், மாமியார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.!

நேற்று மாலை சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு இறுதி சடங்கிற்காக உடலை வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அப்போது, மகன் ஜெய்கணேஷ் உடலை பார்த்து கட்டி தழுவி அவரது தாய் சாந்தி அழுது கொண்டிருந்தார். அப்போது, திடீரென சாந்தி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துதுதவர்கள் தெரிவித்தனர். மகன் இறந்த துக்கத்தில் இருந்த தாயும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையை துண்டியதாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்தவர் அதிரடி கைது..!

click me!