குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது..! முதல் ஆளாக வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published : Jul 18, 2022, 09:58 AM ISTUpdated : Jul 18, 2022, 10:18 AM IST
குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது..! முதல் ஆளாக வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர், மருத்துவமனையில் இருந்து நேரடியாக வாக்களிக்க தலைமை செயலகம் செல்கிறார்.

குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு பதிவு 

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரு கிற 24-ந்தேதியுடன் முடிகிறது. எனவே இந்த பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.ஆளும் கட்சியான பா.ஜ.க. தனது தரப்பில் திரவுபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளன.இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம். எல்.ஏ.க்கு 'பிங்க்' நிற வாக்குச் சீட்டும் தரப்படுகிறது.  தமிழகத்தில் நடக்கும் வாக்குப்பதிவுக்கான ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறை யில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவின்போது சம்பந் தப்பட்ட, அதிகாரிகள் மற்றும் தேர்தல் முகவர்களின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு சோதனை செய்யப்படும். காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்  மாலை 5மணிவரை நடைபெறுகிறது. 

ஜெகதீப் தங்கருக்கு டஃப் கொடுப்பாரா எதிர்க்கட்சி வேட்பாளர்.. யார் இந்த மார்கரெட் ஆல்வா? முழு தகவல்கள் இதோ..!

தலைமை செயலகத்தில் வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள்

 சென்னை தலைமைச் செயல கெகத்தில் உள்ள குழு கூட்ட அறையில், மறைவு அமைக்கப்பட்டுள்ள மேஜை மீது ஓட்டுப் பெட்டிவைக்கப்பட்டு இருக்கும். அங்கு வாக்குச்சீட்டு தரப்படும். வாக்குப்பதிவுக்கு பிறகு அது சீலிடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் விமான சென்னை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். விமானத்தில் தனி சீட்டில் வைக்கப்பட்டு, துப்பாக்கி எந்திய பாதுகாவலரின் காவலுடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது முடிவுகள் அறிவிக்கப்படும். தலைமைச் வளாகத்தில்  எம்.பிகள் செல்வராஜ், கணேசமூர்த்தி, கார்த்திக்  சிதம்பரம், ஆகியோர் வாக்களிக்கின்றனர்.

இன்று நடைபெறுகிறது குடியரசு தலைவர் தேர்தல்… வெற்றிப்பெறப்போவது யார்?

தலைமை செயலகம் செல்லும் முதலமைச்சர்

தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து வாக்களிக்கின்றனர். அவர்களின் வருகைக்காக தலைமைச் செயலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம். பி.எம்.எல்.ஏ.க்கள், அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் நாசர்,எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ள இந்த 3 பேரை தவிர, தமிழகத்தைச் சேர்ந்த 231 எம்.எல்.ஏ.க்களும், தலைமைச் செயலகத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை நான்கு மணி முதல் 5 மணி வரை வாக்களிக்கலாம் என்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நேரடியாக தலைமைசெயலகம் வந்த முதலமைச்சர் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார்.

இதையும் படியுங்கள்

அடேங்கப்பா, 17 பேர் போட்டியிட்ட குடியரசுத் தலைவர் தேர்தல்.. வரலாற்றில் தடம் பதித்த தேர்தல் ஃபிளாஷ்பேக்!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி
டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்