Explainer:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறந்த விவகாரம்! குற்றவாளிகள் யார்? முழு தகவல்!

By Ajmal Khan  |  First Published Jul 18, 2022, 11:15 AM IST

கள்ளக்குறிச்சியில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் வேதியியல் மற்றும் கணித ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


மாணவி மர்ம மரணம்

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கல்வி கற்க வேண்டியது அவசியமாகும், கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை வாய்ந்ததாகும், அந்த வகையில் தான், தான் படிக்கவில்லையென்றாலும் தனது குழந்தை படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என பெற்றோர் நினைப்பார்கள் அந்த வகையில் தான், கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஶ்ரீமதி அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 13 ஆம் தேதி விடுதியின் மாடியில் இருந்து மாணவி ஶ்ரீமதி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

மாணவி உடலில் காயங்கள்

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தங்களது மகள் மாடியில் இருந்து விழுந்துவிட்டால் என்றும் உடனடியாக வரும்படி கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அவசர,அவசரமாக பள்ளிக்கு சென்றுள்ளனர். அதற்க்குள்  மாணவி ஶ்ரீமதியின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் மாணவியின் உடலை பார்த்து அழுது துடித்துள்ளனர். அப்போது மாணவி ஶ்ரீமதியின் உடலில் காயங்கள் இருப்பதாக தங்களது உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்தரிமடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். 5 நாட்களாக மாணவியின் உடலை பெறாமால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளியை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கலவர விஷமிகள் யார்.? தூண்டிவிட்டவங்களுக்கு இருக்கு.. இபிஎஸ் புகாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்

இந்தநிலையில் நேற்று  கனியாமூரில் உள்ள பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேஜைகள், நாற்காலிகள் முழுவதுமாக தீ வைத்தும் திருடியும் கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த பள்ளியில் படிக்கும் 4 ஆயிரம் மாணவர்களின் விவரங்கள் முழுவதுமாக தீ வைத்து எரிக்கப்பட்டது. பள்ளியின் அலுவலகத்தில் ஒரு பொருட்கள் கூட இல்லாமல் சூறையாடப்பட்டன. இந்த காட்சிகளை பார்த்த பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...! தனியார் பள்ளி ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

மாணவி மரணம் - கைது

மாணவி இறப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகியான சாந்தி கூறுகையில், மாணவி ஶ்ரீமதிக்கும், தாய் செல்விக்கும் இடையே நடந்த உரையாடலை கண்டறிய வேண்டும் என்றும் அப்போது தான் உண்மை நிலவரம் தெரியவரும் என கூறினார். ஆனால் மாணவி தரப்போ தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகள் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே இதே பள்ளியில் மாணவர்கள் இறந்துள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். இரண்டு தரப்பு புகார்களையும் காவல்துறை விசாரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தை சூறையாடிய 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதே போல மாணவி எழுதி வைத்தாக கூறி கடிதத்தில் குறிப்பிட்ட வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் உட்பட 5 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தால் தனியார் பள்ளியில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்தும் கொள்ளையும் அடிக்கப்பட்டுள்ளது. எனவே 4 ஆயிரம் மாணவர்களின் கல்வியானது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையை துண்டியதாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்தவர் அதிரடி கைது..!


 

click me!