அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்...! நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ் ஷாக்

By Ajmal Khan  |  First Published Jul 20, 2022, 2:45 PM IST

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம்  ஜூலை 11 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில்  அதிமுக தலைமை அலுவலகத்தை தனது ஆதரவாளர்களோடு ஓ.பன்னீர் செல்வம் கைப்பற்றினார். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 45க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்... இபிஎஸ் கடிதத்திற்கு ஓகே சொன்ன வங்கிகள்!!

Tap to resize

Latest Videos

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த இரு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கட்சி அலுவலகம் ஓபிஎஸ்க்கு  சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பினார். ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது என குறிப்பிட்டார். காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பாக இன்னும் முடிவு கிடைக்காத காரணத்தால் சீலை அகற்றினால் பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

என்ன பாத்து எப்படி சொல்லுவ.. துணிச்சல் எங்கிருந்து வந்தது..சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றிய நீதிபதி

இந்தநிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கினார். அதில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் யாரும் உள்ளே செல்ல  அனுமதிக்ககூடாது என தெரிவித்த நீதிபதி  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் உத்தரவிட்டார். இந்தநிலையில் நீதிபதியின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், அதிமுக அலுவலக உரிமை பற்றி ஆராயமல் உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்தார், மேலும் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு எனவும் கூறினார்.  தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு மேல் முறையீடு செய்ய தகுந்தது எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

GSTகூட்டத்தில் தமிழக அமைச்சர்.!வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் வாயில்லாப் பூச்சியாக இருந்தது ஏன்?இபிஎஸ்

 


 

click me!