நவ.4ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பயணம்!!

By Narendran SFirst Published Nov 29, 2022, 12:30 AM IST
Highlights

பிரதமர் மோடி கூட்டியிருக்கும் அனைத்து மாநில முதல்வர் கூட்டத்தில் பங்கேற்க டிச.4 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி கூட்டியிருக்கும் அனைத்து மாநில முதல்வர் கூட்டத்தில் பங்கேற்க டிச.4 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜி-20 அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் வரும் டிச.4 ஆம் தேதி பொறுப்பேற்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கம் அளிக்கவும், அடுத்த ஆண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார்.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழுவிபரம் உள்ளே!!

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் வரும் டிச.4 ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 4 ஆம் தேதி இரவு டெல்லியில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த நாளான 5 ஆம் தேதி பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு பற்றி அவதூறு கருத்து… கிஷோர் கே சுவாமியை விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி!!

அந்த கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை தனியாக சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி குறித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி கூட்டியிருக்கும்  அனைத்து மாநில முதல்வர் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!