சென்னை கோயம்பேடு மேம்பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தில் ஆணும், பெண்ணும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு மேம்பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தில் ஆணும், பெண்ணும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலை என்று கூட பாராமல் இளம்பெண்ணை சரமாரியாக தாக்க தொடங்கினார். முதலில் கையால் தாக்கிய அந்த நபர் பின்னர் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டாலும் தாக்கியுள்ளார். இதனால் அந்த பெண் மயங்கினார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கடன்; போண்டா மாஸ்டர் எடுத்த விபரீத முடிவு - திருவள்ளூரில் சோகம்
இதனையடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். யாரும் உதவ முன்வரவில்லை. இதனையடுத்து அவரே எப்படியோ இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து ஆன்லைனில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் காணப்படும் ஆண் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் மற்றும் அந்த பெண் அவரது மனைவி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை தாக்கியதாக, எப்ஐஆர் பதிவு செய்து, ரோஷனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் மக்களே.. கூடவே மழைக்கும் வாய்ப்பு இருக்காம்.. வானிலை மையம்!