
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரிராஜன் மற்றும் அரவிந்தன். இவர்கள் இருவரும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்கள். இதனையடுத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என கூறி தகராறு செய்துவிட்டு காயத்துக்கு உரிய டிஞ்சரை எடுத்து போட்டுள்ளனர்.
அதன்பின் தலைக்கேறிய மதுபோதையின் காரணமாக அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் தகாத வார்த்தைகளில் பேசி அவரை வீண் வம்பு இழுத்து அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார்கள்.
விளையாட்டின் போது கழுத்தில் சிக்கிய துணி; துடி துடித்து உயிரிழந்த சிறுமி - சென்னையில் நிகழ்ந்த சோகம்
இவை அனைத்தையும் அந்த மருத்துவமனைக்கு வந்த நபர் தன்னுடைய அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பரப்பி உளளார். அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரலான நிலையில் காவலரை தகாத வார்த்தைகளில் பேசி வீண் வம்பு இழுத்த அரவிந்தன் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.