நோயாளிகளுக்கான படுக்கையில் அமர்ந்து ஹாயாக காற்று வாங்கும் தெருநாய்; திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவலம்

By Velmurugan s  |  First Published Feb 28, 2024, 1:25 PM IST

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கையில் நாய் ஒன்று படுத்து கொண்டு காற்று வாங்கிய சம்பவம் நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தான் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியமான பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 500-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எம்.பி. ஜோதிமணியை காணவில்லை; “கண்டா வரச்சொல்லுங்க” என தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்

Latest Videos

undefined

இந்நிலையில், மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. மருத்துவக் கல்லூரி விடுதிகளிலும் சுற்றித் திரியும் நாய்களால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனையில் நோயாளிகளும், நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்களும் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்தாலும், கருணையற்ற திமுக தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான் ஆதங்கம்

இதனிடையே இன்று அதிகாலையில் காய்ச்சல் சிறப்பு பிரிவு தளத்தில், நோயாளிகள் படுக்கும் படுக்கையில் நாய்கள் வந்து படுத்துள்ளன. இதனால் நோயாளிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை விரைந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!