ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் துடிதுடித்து பலி!

By vinoth kumar  |  First Published Apr 28, 2024, 7:15 AM IST

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சா மணி எனும் தீனதயாளன் (26). திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.


சென்னையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சா மணி எனும் தீனதயாளன் (26). திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. போதைப் பழக்கத்திற்கு அடியான கஞ்சா மணி போதை ஊசி செலுத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பட்டப்பகலில் கோயம்பேடு மேம்பாலத்தில் ஆணும், பெண்ணும் இப்படி பண்ணலாமா? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா மணி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), பிரபு(20) ஆகியோருடன் அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்தி கொண்டார். அப்போது போதை தலைக்கேறியதால் கஞ்சா மணி மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பாகினர். 

இதையும் படிங்க:  பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி வழக்கில் திருப்பம்; குற்றவாளியின் நண்பர் ராஜா சிங் கைது!

பின்னர் கஞ்சா மணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கஞ்சா மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சென்னையில் போதை ஊசி செலுத்தி 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!