Police Commissioner Arun : சென்னையில் புதிய போலீஸ் கமிஷனராக திரு அருண் பொறுப்பேற்றுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற்றுள்ளார் திரு அருண். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண், ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதே தனது தலையாய கடமையாக இருக்கும் என்று கூறுகிறார். இது தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் சென்னை தனக்கு புதிதல்ல என்றும், இங்கு பல்வேறு வகையான பணிகளை தான் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் அருண். மேலும் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை ஒப்பீடுகையில் சென்னையில் தான் குறைவான அளவில் குற்றங்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
undefined
ரவுடிசம் மற்றும் லஞ்சமே ஒழிக்கப்பட வேண்டிய தலையாய விஷயங்கள் என்றும், ரவுடிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். சென்னையை பொறுத்தவரை போக்குவரத்து சிக்னல்களை சரி செய்யும் நடவடிக்கைகளிலும் தான் முனைப்போடு செயலல்ப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், அப்போது தான் குற்றங்கள் நடப்பது குறையும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆம்ஸ்டராங் கொலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அருண், சென்னை உட்பட மாநிலத்தில் பல பகுதிகளில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என்றார். மாநகரக் காவல்துறைத் தலைவர் பொறுப்பை தனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், காவல் துறைக்கும், அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்தார்.
Crime: கடலூரில் பாமக நிர்வாகியை கொல்ல சதி; 5 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்