TVK Vijay : பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில், தமிழக அரசுக்கு பல விஷயங்களை வலியுறுத்தி இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளை கடந்து டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த தளபதி விஜய். இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேலும் எதிர்வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய த.வெ.க கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக அவர் களமிறங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட வெகு சில மாதங்களிலேயே கட்சியின் கொடியும், பாடலும் வெளியானது.
அது மட்டுமல்லாமல் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு பிரமாண்டமாக பல லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தன்னுடைய முதல் அரசியல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் தளபதி விஜய். உண்மையில் தளபதி விஜயின் இந்த அரசியல் மாநாடு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
undefined
உடையும் விடுதலை சிறுத்தை.? திமுகவோடு கை கோர்க்கும் பாமக.!- மாறும் அரசியல் களம்
காரணம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை, நேரடியாக தாக்கி அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக, தளபதி விஜயின் அரசியல் வருகையை பெரிதும் வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகிய இருவருமே, இப்போது தளபதி விஜயை பெரிய அளவில் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தொடர்ச்சியாக பல விஷயங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக வெளியிட்டு வரும் தளபதி விஜய், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் ஒரு விஷயத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் "பெண்களின் முன்னேற்றம் முன்னொரு காலத்தில் இருந்ததை விட தற்பொழுது நம்பிக்கை அளிக்கும் வகையில் உயர்ந்து வந்தாலும், இந்த காலகட்டத்திலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது".
சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும்…
— TVK Vijay (@tvkvijayhq)"பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தினம் தோறும் நிகழ்ந்து வரும் விஷயங்கள் பெரிய அளவில் துயரம் அளிக்கிறது. ஆகவே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு, ஒரு தனி இணையத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த யோசனையை தெரிவித்ததை கருத்தில் கொண்டு, தமிழக அரசு செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கின்ற அந்த விஷயத்தை இந்த சர்வதேச தினத்தில் நான் வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
கூடுகிறது தமிழக சட்டப்பேரவை .! வெளியாக போகுது சூப்பர் அறிவிப்பு.!