தமிழ்நாடு செழிப்பாக உள்ளது; "கலைஞர்" விருது பெற்ற சத்யராஜ் - முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம்!

Ansgar R |  
Published : Nov 24, 2024, 09:04 PM IST
தமிழ்நாடு செழிப்பாக உள்ளது; "கலைஞர்" விருது பெற்ற சத்யராஜ் - முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம்!

சுருக்கம்

Actor Sathyaraj : பிரபல நடிகர் சத்யராஜுக்கு முதல்வர் ஸ்டாலின், இன்று நடைபெற்ற விழாவில் "கலைஞர்" விருது வழங்கியுள்ளார்.

இன்று சென்னையில் முத்தமிழ் பேரவையின் பொன்விளை கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலைத்துறையில் பயணித்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் பிரபல நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின், சத்யராஜுக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். விருது பெற்ற சத்யராஜ், இதற்கு முன்பு பல விருதுகள் கலைஞர் கைகளால் வாங்கியுள்ளேன். ஆனால் அவர் பெயரில் வாங்கும் இந்த விருது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது என்றார்.

விருது பெற்ற பிறகு பேசிய நடிகர் சத்யராஜ் "இந்த விருது எனக்கு கிடைத்ததற்கு தளபதி ஸ்டாலினுக்கு நன்றி கூறுகிறேன். இது கிட்டத்தட்ட சுயநலமான ஒரு நன்றி தான். ஆனால் பொதுநலத்தோடு நான் அவருக்கு நன்றி கூற வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அவர் தமிழகத்திற்கு செய்து வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக அவருக்கு நான் உங்களது சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்". 

பத்து இல்ல; இருபது இல்ல; ஒரே ஆண்டில் 50 படங்கள் - சாதனை படைத்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?

"கலைஞரை குறிப்பிடும் பொழுது அனைவரும் "ஓய்வறியா சூரியன்" என்று நான் குறிப்பிடுவார்கள். அவரைப்போலத்தான் நமது தளபதி ஸ்டாலினும் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு இப்போது செயல்பட்டு வருகிறார். அப்படி ஓயாமல் உழைக்கின்ற ஒரு உழைப்பிற்கு சொந்தக்காரர் தளபதி ஸ்டாலின் தான். அவருடைய தலைமையில் தமிழகத்திற்காக தினம் தினம் ஒரு திட்டங்கள் வெளியாகி வருவது மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது". 

"தமிழகத்தில் வாழும் சாதாரண ஒரு குடிமகனாக எனக்கு அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஷூட்டிங்கிற்காக பல மாநிலங்களுக்கு சென்று வருகிறேன். ஆனால் அங்கெல்லாம் சென்று வரும் பொழுது தான், தமிழகம் எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. பிற மாநிலங்களுக்கு செல்லும் பொழுது அந்த மாநிலங்களின் தலைநகரம் மட்டுமே செழிப்போடு காணப்படும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் முழுவதுமே செழுமையுடன் மலர்ந்து வருகிறது என்றார்".

விராட் & அனுஷ்கா; வைரலான போட்டோவில் இருப்பது அவர்கள் மகன் ஆகாய் தானா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்