விவாகரத்து குறித்து வீண் வதந்தி; 24 மணிநேரம் கெடு வைத்த ஏ.ஆர்.ரகுமான் - YouTubersக்கு செக்!

AR Rahman : தங்களுடைய விவாகரத்து விஷயத்தில் வீண் வதந்திகளை பரப்பி வரும் செய்திகளையோ அல்லது வீடியோக்களையோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.ஆர் ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களாகவே மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்த பல பிரபலங்கள் விவாகரத்தை சந்தித்து வருவது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டார். அதன் பிறகு சில வாரங்கள் பெரும் சர்ச்சையோடு அந்த நிகழ்வு நகர்ந்து வந்தது. இந்த சூழலில் தான் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு தன்னுடைய கணவர் ஏ.ஆர் ரகுமானை பிரிவதாக சட்டபூர்வமாக அறிவித்திருந்தார். 

"நாங்கள் இருவரும் இணைந்து முப்பதாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இனி அது நடக்கப்போவதில்லை. இது இருவருடைய மனங்களும் ஒத்துப் போய் ஏற்பட்ட ஒரு பிரிவு. ஆகவே எங்களுக்கும், எங்களுடைய குடும்பத்தாருக்கும் தேவைப்படும் தனிமையை ரசிகர்கள் தயவுகூர்ந்து கொடுக்கவேண்டும் என்று ஏ.ஆர் ரகுமான் ஒரு பதிவினையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்ட மன கசப்புகளின் காரணமாக மட்டுமே இந்த பிரிவு ஏற்படுவதாகவும் இருவருடைய தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

Latest Videos

ஹிட்டான தெலுங்கு படம்; 40 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஆச்சர்யம்!

ஆனால் இந்த சூழலில் தான் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பல youtube பேச்சாளர்கள் மற்றும் சினிமா சம்பந்தமான செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளங்களில், ரகுமான் மற்றும் சாய்ரா பானு இடையே மனக்கசப்பு ஏற்பட பல்வேறு விதமான காரணங்களை முன் வைத்தனர். ஏ.ஆர் ரகுமான் வீட்டிற்கு வருவதில்லை என்றும், அவருடைய பணிக்காகவே வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார் என்றும் அதனால் தான் இப்பொழுது சாய்ரா இந்த விவாகரத்து முடிவிற்கு வந்திருக்கிறார் என்றும் பிரபலங்கள் சிலர் பேசியது தடுக்கிட வைத்தது. ஆனால் இதற்கு அடிப்படை ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்கின்ற பதிலே மிஞ்சிய நிலையில் தற்போது இந்த விதமான ஆதாரம் இல்லாத விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏ.ஆர் ரகுமான் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. 

Notice to all slanderers from ARR's Legal Team. pic.twitter.com/Nq3Eq6Su2x

— A.R.Rahman (@arrahman)

நர்மதா சம்பத் என்பவர் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய சார்பில் தான் இந்த செய்தியை வெளியிடுவதாக கூறியிருக்கிறார். "ரஹ்மான் மற்றும் சாய்ராவின் விவாகரத்து குறித்து தவறான கருத்துக்களை இனி எந்த ஊடகங்களும் பதிவிடக்கூடாது. ஏற்கனவே அப்படி பதிவிட்டிருக்கும் வீடியோக்கள் மற்றும் செய்திகளை எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் நீக்கிவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் மீது நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்கள்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கன்னட நடிகருடன் நடந்த திருமணம்! வாழ்த்த குவிந்த பிரபலங்கள்!

click me!